இளம் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலாவின் சொத்து மதிப்பு, சம்பள விவரம்.. இதோ
நடிகை ஸ்ரீலீலா
தென்னிந்திய அளவில் தனது இளம் வயதிலேயே மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்துள்ளார் நடிகை ஸ்ரீலீலா. நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை ஸ்ரீலீலா, பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா பக்கம் தலை காட்டினார். இதை தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் கால்தடம் பதித்துள்ளார். அங்கு இவர் நடிப்பில் ஆஷிக் 3 திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும், தனுஷின் 55-வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு
இளம் சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலாவின் சொத்து மதிப்பு, சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளன. இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 15 கோடி முதல் ரூ. 20 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இவர் தனது ஆரம்ப காலங்களில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 லட்சம் வரை சம்பளம் பெற்று வந்துள்ளார். ஆனால், தற்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 1.5 கோடி முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. மார்க்கெட் டிமென்ட் காரணமாக விரைவில் இவருடைய சம்பளம் ரூ. 6 கோடி முதல் ரூ. 7 கோடி வரை உயரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடுவதற்காகவும் கோடிகணக்கில் சம்பளம் வாங்கி வருகிறாராம். புஷ்பா 2 திரைப்படத்தில் நடனமாடியதற்காக ரூ. 2 கோடியும், ஜூனியர் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடியதற்காக ரூ. 2.5 கோடியும் நடிகை ஸ்ரீலீலா சம்பளமாக வாங்கினார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல் யாவும் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.