குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போகும் படம்.. எது தெரியுமா
குட் பேட் அக்லி
நடிகர் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறார்கள்.
அஜித்துடன் இணைந்து இப்படத்தில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், நட்டி நட்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
அஜித்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து இயக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
எது தெரியுமா
அதன்படி, ஆதிக் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி 2 படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
விஷால் 'துப்பறிவாளன் 2' படத்தை இயக்கி நடிக்க திட்டமிட்டுள்ளார் ஆனால், படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மார்க் ஆண்டனி 2 படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
