ஜெயிலரை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் இரண்டு திரைப்படங்களையும் கைபற்றிய முக்கிய நிறுவனம்!

By Jeeva Oct 06, 2022 11:00 AM GMT
Report

ஜெயிலர் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.

இந்நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள இரண்டு திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலரை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் இரண்டு திரைப்படங்களையும் கைபற்றிய முக்கிய நிறுவனம்! | After Jailer Rajini Next Two Movies Update

அடுத்த இரண்டு திரைப்படங்கள்

ஆம், ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்க இருக்கிறார்.

அப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் நிலையில் அதற்கு அடுத்து ரஜினி நடிக்கும் திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறதாம்.

அந்த திரைப்படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருப்பதாகவும், அதர்வா கதாநாயகனாக நடிக்கும் அப்படத்தில் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.   

ஜெயிலரை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் இரண்டு திரைப்படங்களையும் கைபற்றிய முக்கிய நிறுவனம்! | After Jailer Rajini Next Two Movies Update

வெளியாகும் முன்பே கார்த்தியின் சர்தார் திரைப்படம் செய்துள்ள பெரிய வசூல்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US