ரஜினி, கமலுக்கு பிறகு 100 கோடி வசூல் தொட்ட முதல் நடிகர்.. இவர் தான், விஜய் கிடையாது
ரூ. 100 கோடி வசூல் படங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிவாஜி. சங்கர் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.
இதை தொடர்ந்து கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் திரைப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்தை பிடித்தது.
இதன்பின் வெளிவந்த எந்திரன் படமும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தாலும் அதுவும் ரஜினியின் படமாகவே அமைந்துவிட்டது.
ரஜினி, கமலுக்கு பின் இவர் தான்
இந்நிலையில், ரஜினி, கமலுக்கு பின் தமிழ் சினிமாவில் ரூ. 100 கோடி வசூல் செய்த ஒரே நடிகர் சூர்யா மட்டும் தான்.
ஆம், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 7ஆம் அறிவு திரைப்படம் தான் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் ரஜினி, கமலுக்கு பின் ரூ. 100 கோடி வசூல் செய்த படமாகும்.
இதற்க்கு பின் தான் விஜய்யின் துப்பாக்கி திரைப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
