நடிகர் விஜய் சேதுபதியை தொடர்ந்து ஜவான் படத்தில் இணைந்த முக்கிய நடிகை! சென்னையில் படப்பிடிப்பு
ஜவான்
தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர் அட்லி பிகில் திரைப்படத்தை தொடர்ந்து ஷாருக் கானின் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் பல நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டு இருக்கிறது.
ஷாருக் கானுடன் இப்படத்தில் நயன்தாரா, அனிருத், யோகி பாபு உள்ளிட்ட முக்கிய தமிழ் நட்சத்திரங்கள் பணியாற்றி வருகின்றனர்.
முக்கிய நடிகை
மேலும் சமீபத்தில் தான் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது உறுதியானது. இதனை அவரே தான் அளித்திருந்த பேட்டியில் உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியை தொடர்ந்து இப்படத்தில் நடிகை தீபிகா படுகோண் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது அவர் ஷாருக் கானுடன் சென்னையில் இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
ஷங்கர் மகள் அதிதி ஷங்கரா இது..! புகைப்படத்தை பார்த்தால் நம்பவே மாட்டீங்க

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
