விக்ரம் படத்தை பார்த்துவிட்டு லோகேஷுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்.. என்ன செய்துள்ளார் தெரியுமா
விக்ரம் திரைப்படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விக்ரம்.
இப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
இப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
விக்ரம் படத்தை பார்த்துவிட்டு பல திரையுலக நட்சத்திரங்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'Mind Blowing' என மெசேஜ் செய்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக விஜய் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
