நடிகை ராஷ்மிகாவின் நடிப்பை குறை சொன்னேனா? விளக்கம் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
எழுந்த சர்ச்சை
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஃபர்ஹானா.
இப்படத்திற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பேட்டி ஒன்றில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வேள்வியாந்த புஷ்பா படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் கதாநாயகி ஸ்ரீவள்ளி ரோலில் ராஷ்மிகாவை விட சிறப்பாக நடித்திருப்பேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாக தகவல் கடந்த சில நாட்களாக பரவியது.

ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்
இந்த விஷயம் சர்ச்சையில் சிக்கிய நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறியது "துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை. ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு" என கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்துள்ள இந்த விளக்கத்தின் மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஹரிக்கு மட்டும் இவ்வளவு கம்மியா.. சம்பள விஷயத்தில் பாரபட்ச்சம் பார்க்கிறாரா விஷால்