வாய்ப்பு இல்லாததால் விரக்தி.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த முடிவு
ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மூலமாக அவரது திறமையை நிரூபித்தவர். சமீப காலமாக அவர் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
திடீரென இந்த மாற்றம் வர என்ன காரணம் என அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது தெரிவித்து இருக்கிறார்.
வாய்ப்பு வரல..
விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஒரு சில ஹீரோக்கள் மட்டுமே வாய்ப்பு கொடுத்தார்கள், மற்ற நடிகர்களின் படங்களில் வாய்ப்பு எனக்கு வரவில்லை. காக்கா முட்டை படம் வந்தபோது பலரும் பாராட்டினார்கள். ஆனால் ஒன்றரை வருடம் நான் வாய்ப்பில்லாமல் தான் இருந்தேன்.
அதனால் விரக்தியில் இருந்தேன். அதன் பின் தான் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க தொடங்கினேன். அப்படி 15 படங்கள் நடித்துவிட்டேன் என்றாலும் தற்போதும் எந்த ஹீரோவும் எனக்கு வாய்ப்பு தர முன்வரவில்லை என குற்றம்சாட்டி இருக்கிறார்.
சில்லுனு ஒரு காதல் புகழ் பூமிகாவிற்கு இவ்வளவு பெரிய மகனா?