ARM: திரை விமர்சனம்
டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகியுள்ள 'அஜயண்டே ரெண்டாம் மோஷனம்' (ARM) மலையாளப் படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
சக்தி வாய்ந்த சிலை ஒன்று களவுபோக, அதனை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்குகிறார் அஜயன். அந்த சிலையின் பின்னணி என்ன? அதனை கதாநாயகன் அஜயன் எப்படி கண்டுபிடித்தார்? என்பதே படத்தின் கதை.
படம் பற்றிய அலசல்
1900களில் ஹரிபுரம் என்ற ஊரில் விண்கல் ஒன்று விழுகிறது. அதனை அறிந்த அரசர் தனது சமஸ்தானத்திற்கு எடுத்துச் சென்று, சில உலோகங்களை சேர்ந்து விளக்கு சிலை ஒன்றை செய்கிறார்.
அதன் பின்னர் அவரது ஆட்சி செழிப்பாக இருக்கிறது. அரசருக்கு குஞ்சிகெலு (டொவினோ தாமஸ்) பேருதவி செய்ய, அதற்கு பிரதி பலனாய் விளக்கு சிலையை கேட்டு வாங்கி, அவரது ஊருக்கு கொண்டு செல்கிறார்.
அங்கு சில சம்பவங்கள் நடக்க, 1950களில் மணியன் (டொவினோ தாமஸ்) என்ற திருடன் யாராலும் பிடிக்க முடியாத பலம் வாய்ந்தவராக இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒருபுறமும், 1990களில் அஜயன் (டொவினோ தாமஸ்) குறித்த காட்சிகளும் Non-Linear திரைக்கதையாக செல்கிறது.
டொவினோ தாமஸ் மூன்று வித கதாபாத்திரங்களிலும் வேறுபாட்டினை காட்டி அசத்தியிருக்கிறார். குறிப்பாக மணியன் கதாபாத்திரத்தில் பேய்த்தனமான நடிப்பை காட்டியிருக்கிறார்.
மேலும் ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்யும் அவர், யதார்த்தமான அப்பாவி கதாபாத்திரத்திலும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கதாநாயகிகளில் கிருத்தி ஷெட்டி தனது கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கேமியோ தான். ஆனால் சுரபி லக்ஷ்மி மிரட்டியிருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் சண்டைக்காட்சிகள் தான். அதேபோல் திரைக்கதையிலும் தொய்வில்லை. ஜோமோனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. திபு நினான் தாமஸின் இசை நன்றாக இருந்தாலும், சில இடங்களில் இரைச்சல்.
க்ளாப்ஸ்
- டொவினோ தாமஸின் நடிப்பு
- சண்டைக்காட்சிகள்
- திரைக்கதை
பல்பஸ்
- வழக்கமான கதைக்கு மூன்று காலகட்டங்களை காட்டியிருப்பது
மொத்தத்தில் ஆக்ஷ்ன் பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளது இந்த ARM.

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan

விண்ணில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. அடுத்தடுத்து ஏற்படும் தடங்கல் - காரணம் என்ன? IBC Tamilnadu

செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
