அஜித் தமிழர் தானா? அவரே கூறிய பதில் இதோ

By Kathick Feb 18, 2024 08:15 AM GMT
Report

அஜித் 

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை ஏற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

அஜித் தமிழர் தானா? அவரே கூறிய பதில் இதோ | Ajith About He Is Thamizhan Or Not

விடாமுயற்சி படத்தை முடித்தபின், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்க போகிறார் என்றும் கூட தகவல்கள் பரவி வருகிறது.

அஜித் தமிழர் தானா? அவரே கூறிய பதில் இதோ | Ajith About He Is Thamizhan Or Not

அஜித் பற்றி பேசப்படும் விஷயங்களில் ஒன்று, அவர் தமிழர் இல்லை என்பது தான். இதற்கு நடிகர் அஜித் அதிரடியான பதிலை பல ஆண்டுகளுக்கு முன், தான் அளித்த பேட்டியில் அழகாக கூறியுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸின் சிறந்த திரைப்படங்கள்.. ஓர் சிறப்பு பார்வை

ஏ.ஆர். முருகதாஸின் சிறந்த திரைப்படங்கள்.. ஓர் சிறப்பு பார்வை

அஜித் தமிழர் தானா? அவரே கூறிய பதில் இதோ | Ajith About He Is Thamizhan Or Not

நான் ஒரு தமிழன்

இந்த பேட்டியில் பேசிய அஜித் 'அஜித் குமார் என்ற பெயர் வடமாநிலத்தை சேர்ந்தது தான். ஆனால், என்னுடைய தந்தை சென்னையை சேர்ந்த தமிழர் ஆவார். நான் ஒரு தமிழன் தான். எனது தாய் தான் வடமாநிலத்தை சேர்ந்தவர்' என கூறியுள்ளார். தனது ஆரம்பகால திரை வாழ்க்கையின் போது அஜித் கொடுத்த இந்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

அஜித் தமிழர் தானா? அவரே கூறிய பதில் இதோ | Ajith About He Is Thamizhan Or Not

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US