ஒரு நல்ல படத்திற்கு, அப்படமே விளம்பரம் ! - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித்.. சோகத்தில் ரசிகர்கள்
துணிவு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் துணிவு.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. அத்துடன் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாகவுள்ளது.
ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து வரும் துணிவு திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் நடிகர் அஜித் கொள்ள பேச்சு வார்த்தை நடைபெறுவதாக தகவல் வேகமாக பரவியது.

இதற்கிடையே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா பதிவிட்டு இருக்கிறார். ஆம், “ஒரு நல்ல படத்திற்கு, அப்படமே விளம்பரம்- unconditional love” என அஜித் சொன்னதாக பதிவிட்டு இருக்கிறார்.
இதன்முலம் துணிவு திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறாது என்பது தெரியவந்துள்ளது.
"A good film is promotion by itself!! - unconditional love!
— Suresh Chandra (@SureshChandraa) October 31, 2022
Ajith
தங்களின் காதலை அதிகாரபூர்வமாக அறிவித்த கௌதம் கார்த்திக்