AK64 படத்தில் இந்த பிரபல நடிகையா?.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்
அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க அஜித் முடிவு செய்துள்ளார்.
இந்த நடிகையா?
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படமான AK64 படம் குறித்து ஒரு அதிரடி தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, லப்பர் பந்து படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை சுவாசிகா அஜித்தின் 64 - வது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
மேலும், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அக்டோபர் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.