அடுத்த படமும் அஜித் சார் கூடத்தான்.. இயக்குநர் ஆதிக்கின் தரமான சம்பவம்

Bhavya
in பிரபலங்கள்Report this article
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்த டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், வரும் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்கில் படத்தை காண அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தரமான சம்பவம்
இந்நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, அடுத்த படமும் அஜித் சார் கூடத்தான் என்று இயக்குநர் ஆதிக் தெரிவித்துள்ளார்.
சினிமாவை தாண்டி தற்போது கார் பந்தயங்களில் மிகவும் ஆர்வம் செலுத்தி வரும் அஜித் அடுத்த ஆண்டு வரை புதிய படங்களில் கமிட்டாகமாட்டேன் எனக் கூறியுள்ளார். இவருடைய அடுத்த படத்தையும் ஆதிக் இயக்கவுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.