மெகா ஹிட்டான அஜித்தின் திரைப்படத்தில் அவருக்கு பதிலாக நடித்திருக்க வேண்டிய டாப் நடிகர்!
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் தற்போது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்கவுள்ளது. அத்ற்காக அஜித் விரைவில் படக்குழுவுடன் செல்ல இருக்கிறார்.
இந்நிலையில் அஜித் தனது திரைபயணத்தில் மிஸ் செய்து மற்ற நடிகர்கள் நடித்து மெகா ஹிட்டான திரைப்படங்கள் ஏகப்பட்டது உள்ளன. ஆனால் அவரின் மெகா ஹிட் திரைப்படத்தில் வேறுஒரு முக்கிய நடிகர் நடித்திருக்க வேண்டியது எத்தனை பேருக்கு தெரியும்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஆம், அவர் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். ராஞ்சீவ் மேனன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அஜித்துடன் மம்மூட்டி, தபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரும் நடித்திருப்பார்கள்.
மேலும் இப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வானதே நடிகர் பிரசாந்த் தானாம். ஆனால் சில காரணங்களால் அவர் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதிலாக அஜித் நடித்துள்ளார்.
வடிவேல் பாலாஜியை மறக்காத புகழ்- திருமணத்திற்கு பின் செய்த முதல் வேலை