ஓடிடி-யில் வெளியாகும் நடிகர் அஜித்தின் திரைப்படம்.. எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்
வலிமை
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வலிமை. எச். வினோத் இப்படத்தை இயக்கியிருந்தார்.
போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வலிமை படம் வெளிவந்த முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 34 கோடி வரை வசூல் செய்து, சர்கார் படத்தின் சாதனையை முறியடித்தது.
தற்போது திரையரங்கில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை ஓடிடி-யில் வெளியிடவுள்ளனர்.
ஓடிடி ரிலீஸ்

ஆம், வலிமை திரைப்படம் வருகிற 25ஆம் தேதியில் இருந்து ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் என்று தெரியவந்துள்ளது.
டிஜிட்டல் ரிலீசுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி, சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.
நீச்சல் உடையில் சுற்றி திரியும் நடிகை தமன்னா.. மாலாத்தீவில் இருந்து வெளிவந்த வீடியோ