அஜித் வில்லனாக, விஜய் ஹீரோவாக நடிக்கவிருந்த படம்.. மிஸ் ஆனது எப்படி தெரியுமா
விஜய் - அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய், அஜித். இவர்கள் இருவரும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

அப்படி ஒரு வாய்ப்பு வந்தும் மிஸ் ஆகியுள்ளது. மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் தனி ஒருவன். இப்படத்தில் ஹீரோவாக ஜெயம் ரவியும், வில்லனாக அரவிந்த் சாமியும் நடித்திருந்தார்கள். இப்படம் தமிழ் சினிமா காணாத மாபெரும் வெற்றியை கொடுத்தது.
வாய்ப்பு மிஸ்
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற வில்லன் கதாபாத்திரத்தை மோகன் ராஜா அஜித்தை நினைவில் வைத்து தான் எழுதியுள்ளாராம்.
ஆனால், இப்படத்தில் அஜித்தை நடிக்க வைக்க முடியாமல் போயுள்ளது. அதே போல் இப்படத்தில் ஹீரோவாக விஜய்யை தான் முதன் முதலில் முடிவு செய்துள்ளாராம் மோகன் ராஜா.

ஆனால், விஜய் தான் ஜெயம் ரவியை ஹீரோவாக போடச்சொன்னதாக தகவல் கூறப்படுகிறது. இப்படி தான் அஜித் - விஜய் ஒன்றாக நடிக்கவிருந்த வாய்ப்பு மிஸ் ஆகியுள்ளது.
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri