தன்னம்பிக்கையின் 30 வருடம் ! ஒரு ரசிகனாக AK62 பட இயக்குநர் வெளியிட்ட பதிவு

By Jeeva Aug 03, 2022 11:30 AM GMT
Report

அஜித்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், சினிமாவையும் தனது வெவ்வேறு திறமைகளால் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதில் இடம் பிடித்திருக்கார் அஜித்.

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வலிமை திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்த நிலையில், மீண்டும் இயக்குநர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் வங்கி கொள்ளை குறித்த திரைப்படமாக உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. 

தன்னம்பிக்கையின் 30 வருடம் ! ஒரு ரசிகனாக AK62 பட இயக்குநர் வெளியிட்ட பதிவு | Ak62 Director Vignesh Shivan Tweet On Ak

அஜித்தின் 30 வருடங்கள்

இந்நிலையில் நடிகர் அஜித் திரையுலகில் 30 வருடங்கள் ஆகியுள்ளதை கொண்டாடும் வகையில் டிவிட்டரில் ரசிகர்கள் #3DecadesOfAJITHISM என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே தற்போது AK62 திரைப்படத்தை இயக்கவுள்ள பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன், அவரின் டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்தின் 30 வருட திரைபயணம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “தன்னம்பிக்கையின் 30 வருடம், தன்னம்பிக்கை, ஆர்வம், இரக்கம், பணிவு, விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இந்த மனிதனை இப்போது 30 ஆண்டுகளாக மக்களின் இதயங்களை ஆள வைத்துள்ளது.

இன்னும் பல வருடங்கள் உங்களை பார்ப்பது சந்தோஷமாக இருக்க, நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் மற்றும் விரும்புகிறோம்” என அஜித்திற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் தளபதி 67

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US