கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் தளபதி 67 படத்தின் அப்டேட் எப்போது வருகிறது தெரியுமா?
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது, மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகாக நடிகர் விஜய் விசாகபட்டினத்திற்கு செல்லும் போது எடுக்கப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இதனிடையே இப்படத்திற்கு பிறகு விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படமான தளபதி 67 நடிப்பார் என உறுதியாகியுள்ளது. ஆனால் அப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வரவில்லை.

தளபதி 67
மேலும் சமீபத்தில் லோகேஷ் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தளபதி 67 குறித்து பேசியிருந்தார். அதில் தளபதி 67 குறித்த அப்டேட் தன்னிடம் கேட்க வேண்டாம் என்றும், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் சொல்லியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தளபதி 67 படத்தின் அப்டேட் வரும் அக்டோபர் மாதம் வரும் எனவும் அதற்குள் விஜய் வாரிசு படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து டாப் நடிகர்களுக்கு ஜோடியாகும் ஷங்கரின் மகள்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri