திரையுலகில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?
அல்லு அர்ஜுன்
தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இன்று உலகளவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
சுகுமார் இயக்கியிருந்த இப்படம் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தெலுங்கு சினிமா வரலாற்றில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை முதன்முதலில் பெற்றவர் நடிகர் அல்லு அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை கோடியா?
தற்போது அல்லு அர்ஜுன் திரையுலகில் 22 வருடத்தை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஒரு விளம்பர படத்தில் நடிக்க ரூ. 4 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறாராம்.
மேலும் ரூ. 80 கோடி மதிப்புள்ள தனி விமானத்தையும் வைத்துள்ளாராம். ஹைதராபாத்தில் இருக்கும் அல்லு அர்ஜுனின் பிரமாண்டமான வீட்டின் மதிப்பு ரூ. 100 கோடி என சொல்லப்படுகிறது. அந்த வகையில், இவருடைய மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 460 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

40 லட்ச ரூபாய் கடன் வாங்கி அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியர்: வேலையில்லாமல் திரும்பிய துயரம் News Lankasri
