ரூ. 1000 கோடியெல்லாம் ஒரு விஷயமே இல்லை.. புஷ்பா 2 குறித்து அல்லு அர்ஜுன்
புஷ்பா 2
பான் இந்தியன் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் புஷ்பா 2.
சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருந்தனர். ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் சுமார் ரூ. 1110 கோடி வரை வசூல் செய்துள்ளது.
அல்லு அர்ஜுன் பேச்சு
இந்நிலையில், படத்தின் வெற்றி விழா மும்பையில் நடைபெற்றது, அப்போது பேசிய அல்லு அர்ஜுன், " இந்த ஆயிரம் கோடி வசூல் எல்லாம் அன்பின் வெளிப்பாடுதான்.
நம்பர்கள் தற்காலிகமானது ஆனால் இந்த வசூல் செய்வதற்கு காரணமாக இருந்த என் ரசிகர்கள் தான் நிரந்தரமானவர்கள். புஷ்பா 2 படத்தை மிக விரைவில் மற்றொரு படம் முறியடிக்க வேண்டும், அதுதான் சினிமாவின் வளர்ச்சி" என்று கூறியுள்ளார்.