சீரியல் நடிகை ஆல்யா மானசாவிற்கு உடலில் இப்படியொரு பிரச்சனை இருக்கா?... அவரே சொன்ன விஷயம்
ஆல்யா மானசா
ஆல்யா மானசா, தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
காரணம் முன்னணி நாயகி என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் இருக்கும் நாயகியே இவர்தான். நடன நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி பக்கம் வந்தவர் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் நாயகியாக களமிறங்கியவர் பின் ராஜா ராணி 2, இனியா போன்ற தொடர்களில் நடித்து வந்தார்.
இப்போது அவர் ஜீ தமிழில் பாரிஜாதம் தொடரில் நடித்து வருகிறார்.
பேட்டி
நடிகை ஆல்யா மானசா பாரிஜாதம் தொடரில் இசை கதாபாத்திரத்தில் காது கேட்காதவராக நடித்து வருகிறார்.
ஆனால் நிஜத்திலும் நடிகை ஆல்யா மானசாவிற்கு காது கேட்காதாம். அதற்காக காதே கேட்காது என்று சொல்லிவிட முடியாது, யாராவது பேசினால் அதற்கு என்னால் உடனடியாக பதில் அளிக்க முடியாது.
என்ன சொன்னீங்க என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டுவிட்டு பதில் சொல்லிவிடுவேன், இது எனக்கு சிறுவயதில் இருந்தே நடக்கிறது என பேட்டியில் கூறியுள்ளார்.