தனது கணவருக்கு வேறொரு நடிகையுடன் நடந்த திருமணம்.. வாழ்த்துக்கள் சொன்ன ஆல்யா மானசா
ஆல்யா மானசா - சஞ்சீவ்
சின்னத்திரையில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் சீரியலில் ஒன்று ராஜா ராணி. இந்த சீரியலில் ஜோடிகளாக நடித்து பின் நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகளாக மாறியவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் சஞ்சீவ் - ஆல்யா மானசா இருவரும் இணைந்து நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதன்பின் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த காதல் ஜோடிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
சஞ்சீவ் - சைத்ரா ரெட்டி திருமணம்
சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் எனும் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதே போல் பிரபல சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். கயல் சீரியலில் தற்போதைய கதைகளம்படி சஞ்சீவ் - சைத்ரா ரெட்டி இருவரும் பல போராட்டங்களுக்கு பின் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில், சஞ்சீவ் - சைத்ரா திருமணம் சீரியலில் நல்லபடியாக முடிந்த நிலையில், சஞ்சீவின் மனைவி ஆல்யா மானசா, இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'உங்கள் இருவரும் மனமார்ந்த சீரியல் திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்' என கிண்டல் செய்வது போல் கூறி பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது படுவைரலாகி வருகிறது.
You May Like This Video

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
