அன்பே வா சீரியல் நடிகர் நடிகைகளின் நிஜ பெயர் தெரியுமா? - இதோ முழு விவரம்!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "அன்பே வா" தொடர்க்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
2020 ம் ஆண்டு நவம்பர் 2 தேதி ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடரை சரிகம நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் டெல்னா டேவிஸ் மற்றும் விராட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தற்போது "அன்பே வா" சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் நிஜ பெயரை பார்க்கலாம்
பூமிகா - டெல்னா டேவிஸ்
தமிழ், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் "அன்பே வா" தொடர் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் "டெல்னா டேவிஸ்".
வருண் - விராட்
தமிழில் ஒளிபரப்பான "பேரழகி" தொடர் மூலம் அறிமுகமானவர் தான் விராட். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் "அன்பே வா" தொடரில் கதாநாயகன் நடித்து வருகிறார்.
பார்வதி - கன்யா பாரதி
சின்னத்திரையில் பல தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் தான் கன்யா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான "தெய்வம் தந்த வீடு" தொடரில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர். தற்போது ஒளிபரப்பாகும் "அன்பே வா" தொடரில் நடித்து கொண்டு இருக்கிறார்.
வந்தனா ராஜசேகர் - வினோதினி
1992ம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த "வண்ண வண்ண பூக்கள்" படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்தார் வினோதினி. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து தற்போது சன் டிவி சீரியலில் நடித்து வருகிறார்.
அஞ்சலி - வி.ஜே சங்கீதா
சன் டிவியில் ஒளிபரப்பான "அழகு" சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் வி.ஜே சங்கீதா. இவர் தற்போது ஒளிபரப்பாகும் "அன்பே வா" தொடரில் வில்லி ரோலில் நடித்து வருகிறார்.
சோமநாதன் - பரத் கல்யாண்
சின்னத்திரையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பரத் கல்யாண். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார்.
சில்பா - சுவலட்சுமி ரங்கன்
ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் "அழகிய தமிழ் மகள்" தொடரில் வில்லி ரோலில் அறிமுகமானவர் சுபலட்சுமி ரங்கன். இவர் பல தொடர்களில் வில்லி ரோலில் நடித்து தற்போது ஒளிபரப்பாகும் "அன்பே வா" தொடரிலும் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார்.
மிரட்டல் வில்லியாக நடிக்கும் நடிகை சோனியா அகர்வால்.. லேட்டஸ்ட் நியூஸ்