ஜாலியா ஜிம்கானா பாடல் காப்பியா..! காப்பியடித்து இசையமைத்த அனிருத்..
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல முன்னணி இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இரண்டாவது பாடல்
ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடல் 'அரபிக் குத்து' வெளிவந்த நிலையில் அடுத்ததாக பீஸ்ட் படத்திலிருந்து இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தார்கள்.
அந்த வகையில் பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல், ஜாலியா ஜிம்கானா பாடல் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜாலியா ஜிம்கானா காப்பியா
இந்நிலையில், விஜய் பாடியுள்ள இப்பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது.
இந்த பாடலை கேட்ட நெட்டிசன்கள் பலரும், 'ஜாலியா ஜிம்கானா, தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் 'பீலா பீலா' பாடலை போலவே இருக்கிறது என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
இதில் என்னவென்றால், பீஸ்ட் படத்திற்கு இசையமைத்துள்ள, அனிருத் தான் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'ராஜா ராணி 2' தொடரில் தற்போது ஆல்யாவுக்கு பதிலாக நடிக்கும் ரியா, யார் தெரியுமா?