அனிருத் ஜவான் படத்திற்கு இத்தனை கோடி வாங்கினாரா? இந்தியாவிலேயே அதிக சம்பளம்
ஜவான்
இயக்குனர் அட்லீ தற்போது ஹிந்தியில் அறிமுகம் ஆகும் படம் ஜவான். பல வருடங்கள் காத்திருந்து ஷாருக் கான் நடிப்பில் அந்த படத்தை தற்போது முடித்திருக்கிறார் அவர்.
செப்டம்பர் 7ம் தேதி ஜவான் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்காக அட்லீ 35 முதல் 40 கோடி ருபாய் வரை சம்பளமாக பெற்று இருக்கிறார் என முன்பே தகவல் வந்தது.

அனிருத் சம்பளம்
இந்நிலையில் தற்போது ஜவான் பட இசையமைப்பாளர் அனிருத் வாங்கிய சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. அவருக்கு 10 கோடி ருபாய் சம்பளமாக தரப்பட்டு இருக்கிறதாம்.
இதன் மூலமாக அனிருத் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக மாறி இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் அதிகபட்சமாக 8 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்த விஜய்.. வேற லெவல்