மேலும் உடல் எடையை கூட்டும் அனுஷ்கா.. முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை அனுஷ்கா ஷெட்டி இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன் உடல் எடையை கூட்டினார். அதன் பின்னர் அதனை குறைக்க முடியாமல் திணறினார்.
அனுஷ்கா உடல் எடை
அப்போது இருந்து அனுஷ்காவின் உடல் எடை பற்றி பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. அவர் எடையை குறைக்க சிகிச்சை எடுத்துக்கொள்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அவர் ஒல்லியானது போல தெரியவில்லை.
இதன் காரணமாகவே அனுஷ்கா பொது இடங்களுக்கு வருவதையும் தவிர்த்தார். மேலும் படங்கள் நடிப்பதையும் நிறுத்திவிட்டார்.
மீண்டும் ரிஸ்க் எடுக்கும் அனுஷ்கா
இந்நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. அவரது 48வது படமான இதற்காக ஒரு ரிஸ்க் எடுக்கிறார் என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
அனுஷ்கா இந்த படத்திற்காக மீண்டும் உடல் எடையை கூட்டி இருப்பதாகவும், அதனால் தான் அவர் சமீப காலமாக வெளியில் வருவதில்லையாம்.
மேலும் அவரது போட்டோ வெளியில் வர கூடாது என்பதற்காக அதிகம் கெடுபிடி உடன் தான் ஷூட்டிங் நடக்கிறது.
உயிருக்கு ஆபத்து.. இந்த நடிகர் தான் காரணம்: தீராத விளையாட்டு பிள்ளை நடிகை அதிர்ச்சி புகார்