முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் கதறி அழுத வைல்டு கார்டு போட்டியாளர்.. காரணம் இதுதானா
பிக் பாஸ்
பிக் பாஸ் 7 வீட்டிலிருந்து நேற்று இரு போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டனர். யுகேந்திரன் மற்றும் வினுஷா இருவரும் டபுள் எவிக்ட் செய்யப்பட்டது பலருக்கும் ஷாக்கிங் ஆக இருந்தது.
2 பேர் வெளியே போனால் என்ன, ஐந்து பேர் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்து மற்ற போட்டியாளர்களை கதிகலங்க வைத்தனர்.
அர்ச்சனா, கானா பாலா, அன்னபாரதி, தினேஷ் மற்றும் DJ ப்ராவோ ஆகிய ஐந்து பேர் தான் பிக் பாஸ் 7 வைல்டு கார்டில் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தனர். இதில் முதல் நாளே இந்த ஐந்து போரையும் கேப்டன் பூர்ணிமா ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
கண்கலங்கிய அர்ச்சனா
இந்நிலையில், இன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோடின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் வீட்டில் இருப்பவர்கள் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என கூறி வாதம் செய்கிறார்.
பின் ஒரு கட்டத்தில் திடீரென கண்கலங்கி அழுகிறார். இதற்கு முக்கிய காரணம் மாயா என்று கூறுகிறார் அர்ச்சனா.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..