அண்ணன் தங்கையாக நடிக்கவிருந்த ஆர்யா - நயன்தாரா.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா
ஆர்யா - நயன்தாரா
தமிழ் திரையுலகில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஆன் ஸ்க்ரீன் ஜோடிகளில் ஒன்று ஆர்யா மற்றும் நயன்தாரா.
இவ்விருவரும் இணைந்து நடித்து வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர்ஹிட்.
இந்நிலையில், தொடர்ந்து ஜோடிகளாக நடித்து வந்த இவ்விருவரும் முதல் முறையாக இணைந்து அண்ணன் தங்கையாக நடிக்கவிருந்தார்களாம்.
ஆம், சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த அரண்மனை படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நயன்தாரா மற்றும் ஆர்யா தானாம்.
சுந்தர்.சி நடித்த கதாபாத்திரத்தில் ஆர்யாவும், அவருக்கு தங்கையாக நடித்த ஆண்ட்ரியா கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடிக்கவிருந்தார்களாம்.
இந்த தகவலை இயக்குனர் சுந்தர்.சி வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகை சினேகாவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா, இதோ விவரம்

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
