மகன் பிறந்த அதிர்ஷ்டம்.. பல கோடி கொடுத்து புதிய விடு வாங்கிய அட்லீ..
அட்லீ
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவர் தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். முதல் முறையாக ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகிறது.

சமீபத்தில் தான் இயக்குனர் அட்லீக்கு மகன் பிறந்தார். தன்னுடைய மகனுக்கு மீர் என பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயர் ஷாருக்கானின் தந்தையின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வீடு
இந்நிலையில், இயக்குனர் அட்லீ மும்பையில் ரூ. 38 கோடி செலவில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம். இதனால் மும்பையிலேயே அவர் செட்டிலாக போகிறாரா என்பது போல் கிசுகிசுக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் அட்லீ அப்படியொரு திட்டத்தை வைத்து தான் மும்பையில் புதிய வீடு வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.
அஜித்தின் முதற்கட்ட உலக சுற்றுப்பயணம் நிறைவடைந்தது.. எங்கெங்கே சென்றுள்ளார் தெரியுமா