நடிகர் அஜித்துடன் கைகோர்க்கும் அட்லீ!.. எகிறும் எதிர்பார்ப்பு
அட்லீ
கடந்த 2013 -ம் ஆண்டு ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.
இப்படத்தை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து பிரபல இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.
![விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் இவர்கள் தானா!..யார் தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/e6e25338-f33c-4738-bebd-4c1455c183ce/23-64f84f94a30df-sm.webp)
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் இவர்கள் தானா!..யார் தெரியுமா?
அஜித்துடன் கூட்டணி
இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அட்லீ பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், சீக்கிரமே ஹாலிவுட் பக்கம் செல்வேன். இயக்குனர் தயாரிப்பாளர் என்ற முறையில் எனக்கு எல்லாருடையும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
அஜித் சாருடன் இணைய சான்ஸ் கிடைத்தால் அவரை வைத்து இயக்குவேன் என அட்லீ கூறியுள்ளார். தற்போது அஜித் அட்லீ கூட்டணி இணைந்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.
புஷ்பா 2 படத்தின் பிரீ - பிஸ்னஸ் மட்டும் இத்தனை கோடியா?..வாய்பிளக்கும் ரசிகர்கள்