அண்ணையே எதிர்க்க முடிவெடுத்த அட்லீ.. என்ன இப்படி ஆகிருச்சு..
விஜய் - அட்லீ
விஜய் - அட்லீ கூட்டணி இதுவரை தோல்வியை தழுவியதே இல்லை. தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று முறை விஜய்யுடன் இணைந்து மாபெரும் வெற்றியை கொடுத்தவர் அட்லீ.
எப்போது மேடை ஏறினாலும், என்னுடைய அண்ணன் என்னுடைய தளபதி விஜய் என்று கூறிவிடுவார் இயக்குனர் அட்லீ. அந்த அளவிற்கு விஜய்யுடன் நெருக்கமாக பழகி வருகிறார்.
அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடிக்கிறார்.
எதிர்க்க முடிவெடுத்த அட்லீ
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே அக்டோபர் மாதத்தில் தான் விஜய்யின் லியோ திரைப்படமும் வெளியாகவுள்ளது. ஒருவேளை இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகவும் வாய்ப்புகள் அதிகம் என கிசுகிசுக்கப்படுகிறது.
தன்னுடைய அண்ணன் விஜய் என்று கூறிவிட்டு நேருக்கு நேர் விஜய்யுடன் மோத அட்லீ முடிவெடுத்துவிட்டாரா என கேள்வி எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.
குக் வித் கோமாளி மணிமேகலையின் தம்பியை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
