கமல் ஹாசனை தாக்கி பேசிய அசீம்.. டைட்டில் வென்ற பின் இப்படியா, கொந்தளித்த ரசிகர்கள்
அசீம்
பிக் பாஸ் 6 சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அசீம் இந்த சீசனின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அசீம் டைட்டில் வென்றதை பலரும் விமர்சனம் செய்தாலும், மக்களின் வாக்குகளின் அடிப்படையில் தான் அசீம் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என தகவல் வெளிவந்தது.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது அசீம் கோபத்துடன் நடந்துகொண்டதை பார்க்கும் அவருடைய மகன் தவறான உதாரணமாக இதை எடுத்துக்கொள் மாட்டாரா என்று கேள்வி எழுப்பி வந்தனர். அதே போல் கமல் ஹாசனும் இதே காரணத்தை கூறி அசீமை கண்டித்தார்.
தாக்கி பேசிய அசீம்
இந்நிலையில், பிக் பாஸ் டைட்டில் வென்று வெளியே வந்தபின், இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள அசீம், 'பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி கோபப்பட்டு நடந்துக்குறீங்களே இதை பார்த்து உங்க மகன் என்ன நினைப்பாரு. ஏன் டா என் மகனுடன் நான் நேரத்தை செலவளிக்கு பல்லாயிரம் நாட்கள் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியை பார்த்து தான் என் மகன் வளரணும் என்று எந்த அவசியமும் இல்லை' என பேசியுள்ளார் அசீம்.
இது கமல் ஹாசன் தாக்கி தான் அசீம் பேசியுள்ளார் என சமூக வலைதளத்தில் கூறப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலரும் அசீம் மிகவும் தவறான முறையில் பேசியுள்ளார், இதை நிகழ்ச்சியில் இருக்கும் பொழுது தைரியமாக அவர் பேசியிருக்கலாமே, ஏன் பேசவில்லை என்றும் கேட்டு வருகிறார்கள்.
VFX இல்லை, எல்லாமே உண்மை தான்.. துணிவு பட கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு வீடியோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
