பிரபலங்கள் அணியும் ரூ.23,000 மதிப்புள்ள டீ-ஷர்ட் ! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
பிரபலங்களை கவர்ந்த Balmain Paris
கிரிக்கெட் வீரர் தோனி முதல் விக்னேஷ் சிவன் வரை Balmain என்ற பிராண்டட் டீ-ஷர்ட் அணிவதை பார்த்து வருகிறோம்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தனித்தனி ஸ்டைலில் இந்த Balmain டீ-ஷர்ட்-யை அணிந்திருந்தனர்.
சமீபத்தில் கூட பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் Balmain டீ-ஷர்ட் அணிந்துகொண்டு பாலிவுட் நடிகருடன் செல்பி எடுத்துள்ள புகைப்படம் வெளியாகியிருந்தது.
பிரத்யேகமாக தயாரிக்கப்படும் டீ-ஷர்ட்
பாரிஸை தலைமை இடமாக வைத்துள்ள இந்த Balmain paris பழமையான நிறுவனமாக கருதப்படுகிறது.
ஹோலிவுட் பிரபலங்கள் இந்த பிரத்யேக நிறுவனத்தின் டீ-ஷர்ட் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் இந்த டீ-ஷர்டின் இந்திய மதிப்பு ரூ.23,000 மேல் இருக்கும்.
பிரபலங்களை குறிவைத்து விற்கப்படும் இந்த வகை டீ-ஷர்ட் அவர்களுக்கென தனித்தனி ஸ்டைலில் வடிவமைத்து விற்று வருகிறார்களாம்.
பீஸ்ட் ஆடியோ லான்ச் நடக்காது ! ரசிகர்களை கவலையடைய செய்த தகவல்..