அபூர்வ ராகங்கள் முதல் எதிர்நீச்சல் வரை.. இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் சிறந்த படங்கள்
இயக்குனர் இமயம் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் கே.பாலசந்தர். 1930ல் பிறந்த அவர் இளம் வயது முதலே சினிமா மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்த நிலையில், பின்னாளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கும் அளவுக்கு வளர்ந்தார்.
கே.பாலச்சந்தரின் சிறந்த படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
அபூர்வ ராகங்கள்
தற்போது சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தியது இந்த படத்தில் தான். அபூர்வ ராகங்கள் படம் வெளிவந்து 48 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது என்றாலும் தற்போதும் ரசிகர்களால் பேசப்படும் படமாக இருந்து வருகிறது.
கமல் தான் ஹீரோ, ஸ்ரீவித்யா ஹீரோயின், ரஜினிக்கு சின்ன ரோல் தான் என்றாலும் திரும்பி பார்க்க வைத்தது.
புன்னகை மன்னன்
காதல் காவியமாக தற்போதும் பேசப்படும் படங்களில் ஒன்று புன்னகை மன்னன். கமல், ரேகா நடித்து இருப்பார்கள். படங்களில் காதலர்கள் கிளைமாக்ஸில் சேர்வது போல தான் எல்லா கதைகளும் இருக்கும். ஆனால் இந்த படம் வித்தியாசமாக காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது போல கதை இருக்கும்.
காதலுக்கு ஹீரோயின் வீட்டில் ஒப்புதல் இல்லை என்பதால் சேர்ந்து வாழ முடியவில்லை, சேர்ந்து இறந்தாவது போவோம் என முடிவெடுத்து அருவியின் உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வார்கள்.
அதில் காதலி மட்டும் இறந்துவிட்டு காதலன் உயிர்பிழைத்தால் என்ன ஆகும் என்பது தான் கதை.
வறுமையின் நிறம் சிவப்பு
கமல் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் மிகப்பெரிய ஹிட் ஆன படம் வறுமையின் நிறம் சிவப்பு. கே.பாலசந்தர் அந்த காலத்திலேயே nepotism பற்றி பேசிய படம் அது.
1980ல் வெளிவந்த இந்த படம் வேலையில்லா திண்டாட்டம் பற்றிய கதை தான். அதனால் தற்போதைய சூழ்நிலையிலும் ஒத்துபோகும் கதையாக இருக்கும்.
எதிர்நீச்சல்
கே.பாலசந்தர் இயக்கத்தில் 1968ல் வெளிவந்த படம் இது. இதே பெயரில் சிவகார்த்திகேயன் 2013ல் படம் நடித்தது குறிப்பிடத்தக்கது. சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற பெயரில் ஒரு சீரியலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
எதிர்நீச்சல் என்ற பெயர் மூலம் அப்போதே ரசிகர்களை சிந்திக்க வைத்தவர் கே.பாலசந்தர்.
நான்கைந்து குடும்பங்கள் வாழும் ஒரு காம்பவுண்டு உள்ளே படிக்கட்டு அடியில் வசித்துவரும் ஆதரவற்ற நபராக நாகேஷ் நடித்து இருப்பார். அங்கு இருப்பவர்களுக்கு கடைக்கு செல்வது, ஐயன் செய்வது, மாவு அரைப்பது உள்ளிட்ட வேலைகளை செய்துகொடுப்பார்.
அவர்கள் போடும் சாப்பாட்டில் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருப்பார். ’நான் மாது வந்திருக்கேன்.. நான் மாது வந்திருக்கேன்..’ என அவர் தட்டை தூக்கிக்கொண்டு வீடு வீடாக செல்லும் போது சந்திக்கும் அவமானத்தை பார்த்தால் நமது கண்களிலேயே கண்ணீர் வரும்.
கே.பாலசந்தர் இப்படி ஏராளமான படங்களை இயக்கி இருக்கிறார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களையும் எழுதி தயாரித்து இருக்கிறார்.