ரஜினிக்கு பல ஹிட் படங்கள் கொடுத்த எஸ்.பி.முத்துராமனின் சிறந்த படங்கள்! ஸ்பெஷல் தொகுப்பு

By Parthiban.A Feb 28, 2024 09:30 PM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் ஆன களத்தூர் கண்ணம்மா படத்தில் துணை இயக்குனராக தனது சினிமா பணியை தொடங்கியவர் எஸ்.பி. முத்துராமன். துணை இயக்குனராக அனைத்து பணிகளையும் கற்றுக்கொண்டு 1972ல் கனிமுத்து பாப்பா என்ற படம் மூலமாக இயக்குனராக களமிறங்கினார்.

அதற்கு பிறகு ரஜினி, கமல், ஜெய்ஷங்கர் உள்ளிட்ட முக்கிய நடிகர்களை வைத்து பல ஹிட் படங்கள் கொடுத்தார் எஸ்.பி முத்துராமன். அவருக்கு கமர்ஷியல் கிங் என பெயரும் சினிமா துறையில் உண்டு.

அவரது சிறந்த படங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

சகலகலா வல்லவன்

1982ல் வெளிவந்த இந்த படத்தில் கமல், அம்பிகா ஜோடியாக நடித்து இருப்பார்கள். ஊரில் அராஜகம் செய்யும் ஹீரோயின் அம்பிகாவின் அம்மாவை கமல் எதிர்க்க, பதிலுக்கு அம்பிகாவின் சகோதரர் கமலின் தங்கையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிடுவார்.

அதற்கு பிறகு மாறுவேடத்தில் பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை செய்து கமல் தனது தங்கையை எப்படி அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார், தானும் அம்பிகாவை மணக்கிறார் என்பது தான் கதை.

இந்த படத்தில் வரும் 'இளமை இதோ இதோ..' பாடல் தற்போதும் நியூ இயர் கொண்டாட்டம் என்றால் டிவி, ரேடியோக்களில் வந்துகொண்டு தான் இருக்கிறது. கமல் பைக்கில் வந்து 'விஷ் யூ ஏ ஹாப்பி நியூ இயர்' என சொல்வது தற்போதைய இளம் தலைமுறையினருக்கும் பரிட்சயமான ஒன்றாக தான் இருக்கும்.  

ரஜினிக்கு பல ஹிட் படங்கள் கொடுத்த எஸ்.பி.முத்துராமனின் சிறந்த படங்கள்! ஸ்பெஷல் தொகுப்பு | Best S P Muthuraman Movies In Tamil

புவனா ஒரு கேள்விக்குறி

1977இல் வெளிவந்த இந்த படத்தில் சிவகுமார், ரஜினி, சுமித்ரா உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். அப்போது மிகப்பெரிய ஹிட் ஆன படம் இது.

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் இந்த காலத்தில் தமிழ் சினிமாவில் அரிதாகிவிட்டது. ஆனால் அதை அந்த காலத்திலேயே செய்து அசத்தியவர் எஸ்.பி.முத்துராமன்.

டைட்டில் பெயர் புவனா ரோலில் சுமித்ரா நடித்து இருப்பார். சிவக்குமாருக்கு பிளேபாயாக நெகடிவ் ரோல். ரஜினி மற்றும் சிவக்குமார் இருவரும் ஒன்றாக தொழில் செய்து வரும் நிலையில் ரயிலில் செல்லும்போது ஒய்.ஜி.மகேந்திரன் பெட்டியில் பணம் இருக்கும்.

டீ குடிக்க கீழே இறங்கிய ஒய் ஜி இறந்துவிட சிவகுமார் யாருக்கும் தெரியாமல் பெட்டியில் இருக்கும் பணத்தை திருடிவிடுவார். அதன் பின் பணத்தை தேடி வரும் ஒய் ஜி மகேந்திரனின் சகோதரியான சுமித்ராவை எப்படியோ தனது காதல் வலையில் வீழ்த்தி கர்பமாகிவிடுவார் சிவக்குமார்.

ரஜினிக்கு பல ஹிட் படங்கள் கொடுத்த எஸ்.பி.முத்துராமனின் சிறந்த படங்கள்! ஸ்பெஷல் தொகுப்பு | Best S P Muthuraman Movies In Tamil

அதன் பின் அவரை கைவிட்டுவிட்டு பணக்கார பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்வார் சிவக்குமார். சுமித்ராவுக்கு ஆதரவாக ரஜினி இருப்பார்.

சிவகுமார் திருமணம் செய்த பெண்ணுக்கு குழந்தையே பிறக்காத நிலையில், எப்படியாவது சுமித்ராவுக்கு பிறந்த தனது நிஜ மகனை எப்படியாவது தத்தெடுக்க வேண்டும் என முயற்சிப்பார். அதற்காக அவர் பல்வேறு மோசமான வேலைகளையும் செய்வார். இறுதியில் என்ன ஆனது என்பது தான் கதையாக இருக்கும்.

முரட்டுக்காளை

ரஜினி கெரியரில் பல ஹிட் படங்கள் கொடுத்தவர் எஸ்.பி.முத்துராமன். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று முரட்டுக்காளை படம்.

1980ல் வெளிவந்த அந்த படத்திற்கு அப்போதே 40 லட்சம் ருபாய் பட்ஜெட். ஏ.வி.எம் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது.

வீரம் அஜித் போல இந்த படத்தில் ரஜினிக்கு நான்கு தம்பிகள். காளையை அடக்கும் பாடல் ரஜினியின் அறிமுக பாடலாக இருக்கும். தற்போதும் கொண்டாட்டங்களில் அந்த பாடல்களை ரசிகர்கள் கேட்டிருக்க வாய்ப்புண்டு.

வழக்கமான பழிவாங்கும் கதை என்றாலும் ரஜினியின் கேரியரை கமர்சியல் சினிமாவின் உச்சத்திற்கு கொண்டு சென்றதில் இந்த படத்திற்கும் அதிக பங்கு உண்டு.

ரஜினிக்கு பல ஹிட் படங்கள் கொடுத்த எஸ்.பி.முத்துராமனின் சிறந்த படங்கள்! ஸ்பெஷல் தொகுப்பு | Best S P Muthuraman Movies In Tamil

தர்மத்தின் தலைவன்

நடிகை குஷ்புவுக்கு தமிழில் இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்க, ஜோடியாக சுஹாசினி நடித்து இருப்பார்.

1978 இல் இந்தியில் வெளியான கஸ்மே வாடே படத்தின் தழுவல் தான் இந்த. மிகப்பெரிய ஹிட் ஆன இந்த படத்திற்கு ரஜினி சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்தார் என்பது கூடுதல் தகவல்.

ரஜினிக்கு பல ஹிட் படங்கள் கொடுத்த எஸ்.பி.முத்துராமனின் சிறந்த படங்கள்! ஸ்பெஷல் தொகுப்பு | Best S P Muthuraman Movies In Tamil

ஆறிலிருந்து அறுபது வரை

ஸ்டைல் சுத்தமாக காட்டாமல், ரஜினியை சிறந்த நடிகராக வெளிக்காட்டிய படம் இது. சந்தானம் என்பவற்றின் ஆறு முதல் அறுபது வயது வரையான பயணம் தான் இந்த படம்.

ஆறு வயதில் பெற்றோரை இழந்து தம்பி தங்கைகளை கரைசேர்க்க வேண்டிய பொறுப்புடன் கடினமாக உழைத்து படிக்க வைக்கிறார் ரஜினி.

ஆனால் அவர்கள் வசதி வந்தவுடன் தங்களை வளர்ந்துவிட்ட அண்ணனை கண்டுகொள்வதில்லை. அப்படி அவர் 60 வயதில் இறக்கும் வரை கதை நீளும்.

இந்த படத்திற்கு கதை எழுதியது பஞ்சு அருணாச்சலம், எஸ்பி முத்துராமன் இயக்கி இருந்தார். 

ரஜினிக்கு பல ஹிட் படங்கள் கொடுத்த எஸ்.பி.முத்துராமனின் சிறந்த படங்கள்! ஸ்பெஷல் தொகுப்பு | Best S P Muthuraman Movies In Tamil

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US