உப்பால் வந்த சண்டை.. யாரை இப்படி சொன்னார் கமல்? இன்றைய முதல் ப்ரொமோ
பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டில் தற்போது எதற்கெடுத்தாலும் சண்டை தான் நடந்து வருகிறது. எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதில் அஸீம் மற்றும் மற்ற போட்டியாளர்களுக்கு இடையே மோதல் நடந்து கொண்டே தான் இருக்கும்.
இந்நிலையில் இந்த வாரம் 'அரச குடும்பமும் அருங்காட்சியகமும்' என்ற டாஸ்க் நடந்தது. அதில் ரச்சிதாவின் சாப்பாட்டில் ஷிவின் உப்பு போட்ட விவகாரம் தான் சண்டையாக மாறியது. அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் இதற்காக மிகப்பெரிய சண்டை போட்டனர்.
கமல் சொன்ன கருத்து
இந்நிலையில் இன்று கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவர் போட்டியாளர்கள் போட்ட சண்டை பற்றி பேசி இருக்கிறார்.
"உப்பு நாட்டையும் மாற்றி இருக்கு, வீட்டையும் மாற்றி இருக்கு. பதவிக்கு இருக்கும் ஆசை, அதற்கான பொறுப்பை செய்ய வேண்டும் என்பதில் இல்லை."
"நான் (கமல்) என்ன பேசுவேன் என யூகிக்க தெரிந்தவர்களுக்கு, தான் என்ன பேசவேண்டும் என்பதை யோசிக்காமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்" என கமல் கூறி இருக்கிறார்.
கமல் பேசுவதை பார்த்தால் அஸீம் தான் வசமாக சிக்கப்போகிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
#Day41 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision@preethiIndia @NipponIndia pic.twitter.com/e5VH8FoDqS
— Vijay Television (@vijaytelevision) November 19, 2022
நடிகர் அப்பாஸுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை பெட்டில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்