பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் மதுரை முத்து - ஜி.பி.முத்து! வெளியான அதிரடி தகவல்
பிக்பாஸ்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.
கடந்த ஐந்து சீசன்களில் வெற்றியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க இருக்கிறது. ஏற்கனவே கமலுடன் இந்நிகழ்ச்சியின் அதிரடி ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தொடர்ந்து பிக்பாஸ் சீசனில் கலந்து கொள்ளவுள்ள நட்சத்திரங்கள் குறித்து தகவல்கள் பரவி வந்தன. அதன்படி இரண்டு முக்கிய நட்சத்திரங்கள் குறித்த பெயர்கள் தான் அடிப்பட்டு இருக்கிறது.
இரண்டு முத்துகள்
ஆம், பிக்பாஸ் சீசன் மதுரை முத்துவை கலந்து கொள்ள அணுகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கேட்ட சம்பளத்தை தர சேனல் சம்மதிதுள்ளதால் கலந்து கொள்ளலாம் என மதுரை முத்துவும் முடிவு எடுத்திருந்தாராம்.
இதனிடையே யூடியூப் பிரபலம் ஜி.பி.முத்துவும் பிக்பாஸ் கலந்து கொள்ள சம்மதிக்க வைத்துள்ளது மதுரை முத்துக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள மாட்டேன் என முதுரை முத்து கூறிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பூர்வீக வீட்டை பார்த்துள்ளீர்களா