அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடிக்கும் பிக்பாஸ் காதல் ஜோடிகள்! புகைப்படத்துடன் இதோ

By Jeeva Oct 03, 2022 07:20 AM GMT
Report

துணிவு 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வந்தார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இறுதிகட்ட படப்பிடிப்பு இம்மாதம் முடிந்துவிடும் நிலையில் துணிவு திரைப்படத்தை பொங்கலை முன்னிட்டு எதிர்பார்த்து வருகின்றனர் ரசிகர்கள். ஆனால் இப்படம் ஜனவரி இறுதியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடிக்கும் பிக்பாஸ் காதல் ஜோடிகள்! புகைப்படத்துடன் இதோ | Bigg Boss Star In Ajith Thunivu

பிக்பாஸ் காதல் ஜோடிகள்

இந்நிலையில் தற்போது கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பாவனி மற்றும் அமீர். காதல் ஜோடிகளாக தற்போது சுற்றி வரும் இவர்களுக்கு அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆம், அதன்படி தற்போது பாவனி, அமீர் மற்றும் சிபி சக்ரவர்த்தி மூவரும் விமானத்தில் துணிவு திரைப்பட ஷூட்டிங்கிற்காக செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது அதிகாரபூர்வமான தகவல் என்றும் சொல்லப்படுகிறது.   

அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடிக்கும் பிக்பாஸ் காதல் ஜோடிகள்! புகைப்படத்துடன் இதோ | Bigg Boss Star In Ajith Thunivu

3 நாள் முடிவில் பொன்னியின் செல்வன் மொத்தமாக செய்த வசூல்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US