கார்த்தி எனக்கு தம்பியா ! புகைப்படத்துடன் அவரின் தங்கை பிருந்தா வெளியிட்ட பதிவு..
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களாக திகழ்ந்து வரும் சகோதர நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி.
இவர்கள் நடிகர் சிவகுமாரின் மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது, சூர்யா மற்றும் கார்த்திக்கு பிருந்தா என்ற தங்கையும் உள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிருந்தா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் சகோதரர்களுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
தனது சகோதரர்கள் குறித்து பிருந்தா
மேலும் அவரின் பதிவில் "இது எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம், எனக்கு எப்போதும் எனது சகோதரர்கள் போல இருக்க வேண்டும். அதனால் ஆண்கள் அணியும் உடையை அணிவேன். முடியை வளர்ப்பதை வெறுப்பேன்.
ஏனென்றால் தான் என் சகோதரர்களிடமிருந்து வித்தியாசமாக தெரிய கூடாது என்பதற்காக. நான் கல்லூரி படிக்கும் வரை என் மூத்த அண்ணனின் சட்டையையும், இளைய அண்ணனின் ஜீன்ஸையும் அணிவேன். இப்பொழுதாவது நான்தான் இளையவள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.
இப்பொழுதும் மக்கள் என்னிடம் கார்த்தி என் தம்பியா எனக் கேட்பார்கள். இனிமேல் அப்படிக் கேட்காதீர்கள் என குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி, உன்னை விட நான் இளமையாக தெரிவதற்கு, நான் என்ன செய்ய முடியும்" என பதிவிட்டுள்ளார்.