திங்கட்கிழமையிலும் சென்னையில் ரூ. 1 கோடி வசூலித்த படங்கள்- அஜித் லிஸ்டில் இல்லையா?
தமிழ் சினிமா இந்த வருட ஆரம்பத்தில் இருந்து நல்ல தரமான படங்களாக பார்த்து வருகிறது. மற்ற மொழிகளில் இருந்து ரிலீஸ் ஆன படங்களும் தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தின.
புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2 போன்ற படங்கள் எல்லாம் பல மொழிகளில் ரிலீஸ் ஆகி வெற்றி கண்டன.
இப்போது தமிழில் கடந்த ஜுன் 3ம் தேதி கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் படு மாஸாக வெளியாகியுள்ளது. படத்தின் முதல் நாளில் இருந்தே நல்ல விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கின்ற.
இன்னும் சில தினங்களில் படம் தமிழகத்திலேயே ரூ. 100 கோடியை எட்டிவிடும் என்கின்றனர்.

திங்கட்கிழமைகளில் அதிகம் வசூலித்த படங்கள்
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படங்கள் அதிகம் வசூலிப்பது வழக்கம் தான். ஆனால் வேலை நாட்களான அதிலும் திங்கட்கிழமைகளில் படம் ரூ. 1 கோடி வரை வசூலிப்பது என்றால் அது சாதாரணமான விஷயம் இல்லை.
தற்போது கமல்ஹாசனின் விக்ரம் படம் நேற்று திங்கட்கிழமை கூட ரூ. 1.09 கோடி வரை வசூலித்துள்ளது.
இப்படம் போல் இதற்கு முன் திங்கட்கிழமைகளில் ரூ. 1 கோடிக்கு வசூலித்த படங்களின் விவரத்தை காண்போம்.
- பாகுபலி 2- ரூ. 1.10 கோடி
- 2.0- ரூ. 1.32 கோடி
- பிகில்- ரூ. 1.72 கோடி
- விக்ரம்- ரூ. 1.09 கோடி
இந்த லிஸ்டில் அஜித் படங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
அட நம்ம நடிகர் கமல்ஹாசனா இது, கையில் கிரிக்கெட் பேட்டுடன்- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்