அன்று கமல் படத்தில் நடித்த சிறுவன், இன்று அவரை வைத்தே எடுத்த படம்.. யார் தெரியுமா?
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில், தற்போது அஜித் கமல் படத்தில் குழந்தை நட்சத்திமாக நடித்த ஒருவரின் போட்டோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அட இவரா?
அவர் வேறுயாருமில்லை, நடிகர் சக்ரி டோலெட்டி தான். கமல் நடிப்பில் தமிழில் ‘சலங்கை ஒலி’ என்ற படத்தில் பரதநாட்டிய கலைஞராக இருக்கும் கமல் சிறுவன் ஒருவரை அழைத்து போட்டோ எடுக்க சொல்வார்.
அந்த சிறுவன் தான் சக்ரி டோலெட்டி. இது போன்று 3 முதல் 4 படங்களில் நடித்த இவர் என்ன செய்து வருகிறார் என்று உங்களுக்கு தெரியுமா? இவர் பின்னாளில் 2009-ம் ஆண்டு வெளியான ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார்.
2012-ம் ஆண்டு அஜித்தை வைத்து ‘பில்லா 2’ படத்தை இயக்கினார். பலரும் அந்த சிறுவனா இவர்? என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri