டிமான்ட்டி காலனி 2 படத்தில் இப்படியொரு விஷயம் இருக்கா.. ஹிண்ட் கொடுத்த இயக்குனர்
டிமான்ட்டி காலனி
அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஹாரர் படம், ‘டிமான்ட்டி காலனி' மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியை அடுத்து டிமான்ட்டி காலனி 2 உருவாகி இருக்கிறது. இப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

மூன்றாம் பாகமா?
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அருள்நிதி, டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தில், முதல் பாகத்தின் தொடர்பு இருக்கும். அந்த விஷயத்தை அஜய் ஞானமுத்து ரொம்ப சிறப்பா திரைக்கதையில் கொண்டு வந்துள்ளார்.
முதல் பாகத்தில் ஸ்ரீநி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். படம் முடியும் போது அந்த கதாபாத்திரம் இறந்துட்டதாக காண்பித்து இருப்போம். இந்த படத்தில் ரகுங்கற என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
இரண்டாம் பாகம் பண்ணும் போதே 3, 4-ம் பாகங்களுக்கான கதையை ரெடி செய்துவிட்டார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. படத்தின் வெற்றிகளை தொடர்ந்து தான் அடுத்தடுத்த பாகங்களை எடுக்கதிட்டமிட்டு இருக்கிறோம் என அருள்நிதி தெரிவித்துள்ளார்.

கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri