ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்! மாறன் பட அறிவிப்பால் கடுப்பான பேன்ஸ்..
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாறன்
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான தனுஷ், தொடர்ந்து அவரின் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாறன் திரைப்படம் நாளை ஹாட்ஸ்டார் ஆப்பில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே தற்போது மாறன் திரைப்படம் நாளை மாலை 5 மணிக்கு ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளனர்.
ரசிகர்களை அப்செட் ஆகிய அறிவிப்பு
பொதுவாக OTT-யில் வெளியாகும் திரைப்படங்கள் அந்த நாளிற்கு முன்பே இரவு 12 மணிக்கெல்லாம் ஒளிபரப்பாக தொடங்கிவிடும், ஆனால் மாறன் படத்திற்காக ரசிகர்கள் மாலை 5 மணி வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால் கடுப்பான ரசிகர்கள் இது குறித்து பதிவிட்டு வருகின்றனர், மேலும் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ஜகமே தந்திரம் திரைப்படமும் OTT-யில் தான் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி எனக்கு தம்பியா ! புகைப்படத்துடன் அவரின் தங்கை பிருந்தா வெளியிட்ட பதிவு..