வெற்றிமாறன் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், தனுஷ்.. முதல் முறையாக இணைந்த கூட்டணி..
விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்து வருகிறார்.
அதே போல் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார்.
ரூ. 4 கோடி பட்ஜட்டில் துவங்கிய இப்படம் தற்போது ரூ. 40 கோடி வரை சென்றுள்ளது என சமீபத்திய பேட்டியில் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.
ரஜினி - கமல் - தனுஷ்
இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்று தகவல் வெளியானது. இளையராஜா இசையில் தனுஷ் பாடுவது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் தனுஷை தொடர்ந்து இளையராஜா இசையில் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்முலம் முதல்முறையாக வெற்றிமாறன் இணைந்து ரஜினிகாந்த், கமல் ஹாசன் மற்றும் தனுஷ் கூட்டணி நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read This : வாரிசு படத்தை பல கோடிக்கு கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்.. Satellite உரிமை எத்தனை கோடி தெரியுமா

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
