இட்லி கடை படத்திற்காக தனுஷ் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
தனுஷ்
நடிகர் மற்றும் இயக்குநராக தனுஷ் சமீபகாலமாக மிகவும் பிஸியாக இருக்கிறார். இவர் இயக்கத்தில் பா. பாண்டி வெளிவந்ததை தொடர்ந்து அதன்பின் நீண்ட இடைவேளைக்கு பின் ராயன் வெளியானது.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் ரூ. 100+ கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் எனும் படத்தை தனுஷ் இயக்கியிருந்தார். இப்படம் ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றது.
இட்லி கடை
மேலும் தற்போது தனுஷின் இயக்கத்தில் நான்காவதாக உருவாகியுள்ள படம்தான் இட்லி கடை. இப்படத்தை இயக்கி ஹீரோவாக தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் என பலரும் நடித்துள்ளனர். நாளை இப்படம் திரையரங்கில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை இயக்கி நடித்துள்ள நடிகர் தனுஷ், இப்படத்திற்காக வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இட்லி கடை படத்திற்காக நடிகர் தனுஷ் ரூ. 40 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5,000 ஏக்கர் நிலப்பரப்பில் பற்றியெரியும் காட்டுத்தீ: உயிரைக் கொடுத்து போராடும் தீயணைப்பு வீரர்கள் News Lankasri
திருமணம், வெளிநாட்டுப் பயணங்கள் வேண்டாம்... தங்கம் வாங்காதீர்: இந்தியப் பிரதமர் வலியுறுத்தல் News Lankasri