ஜவான் படத்திற்காக அட்லீ வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
ஜவான்
இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ஜவான். பிகில் படத்திற்கு பின் அட்லீ இயக்கத்தில் மாபெரும் பொருட்செல்வவில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் பாஷா ஷாருக்கான் நடித்துள்ளார்.

மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். நேற்று இப்படத்தின் டிரைலர் வெளிவந்து இணையத்தை அதிரவைத்தது.
மாஸ் கமெர்ஷியல் ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது என்பதை டிரைலர் பார்க்கும்போது ஓரளவு நம்மால் கணிக்க முடிகிறது. இதற்குள் அட்லீக்கே உரித்தான மனதை தொடும் செண்டிமெண்ட் காட்சிகளும் இருக்கும் என்றும் தெரிகிறது.

டிரைலருக்கு கிடைத்துள்ள பாராட்டுக்கள் ஒரு பக்கம் இருந்தாலும் டிரைலரில் இடம்பெறும் சில காட்சிகள் காப்பி என கூறி வழக்கமான சில விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஆனால், ஜவான் படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அட்லீ சம்பளம்
இந்நிலையில், ஷாருக்கான் போன்ற மாபெரும் நட்சத்திரத்தை வைத்து ஜவான் எனும் மிகப்பெரிய படத்தை இயக்க அட்லீ வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அட்லீ இப்படத்திற்காக ரூ. 35 முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்த படம் மட்டும் உலகளவில் வெற்றியடைந்தால் கண்டிப்பாக அட்லீயின் சம்பளம் எதிர்பார்க்கமுடியாது உச்சத்தை தொடும் என கூறப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ் எல்லாம் ஒரு மூஞ்சியா.. திரையுலகில் நடந்த மாபெரும் அதிர்ச்சியளிக்கும் விஷயம்