மனைவியை பிரிந்த மிஷ்கின், தனது மகளுக்காக செய்துவரும் விஷயம்- முதன்முறையாக அவரே சொன்ன தகவல்
தமிழ் சினிமாவில் உலகில் மிகவும் பிரபலமான இயக்குனராக உள்ளார் மிஷ்கின்.
வின்சென்ட் செல்வாவிடம் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர், சித்திரம் பேசுதடி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார்.
அடுத்து அவரது இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் வெளியாக உள்ளது.
மகள், மனைவி பற்றி மிஷ்கின்
நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். திருமணத்திற்கு பின் எனக்கு அழகான மகள் பிறந்தநாள். மகள் பிறந்த சில நாட்களிலேயே மனைவியை பிரிந்துவிட்டேன், எங்களது பிரிவிற்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம்.
என் மனைவி, மகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார். எனது மகளுக்காக நான் நடிக்கும் படங்கள் மூலம் கிடைக்கும் பணத்தை தனியாக சேமித்து வைத்திருக்கிறேன், எனது மகளின் திருமணத்திற்கு அதை செலவு செய்வேன் என தனது குடும்பம் குறித்து முதன்முறையாக பேசியுள்ளார்.
வலிமையை விட பீஸ்ட் படம் அதில் மிகவும் குறைவா?- வெளிவந்த முக்கிய விவரம்