சாமி தரிசனம் முடித்துவிட்டு வந்த நடிகை கீர்த்தி சனோனுக்கு திடீரென முத்தம் கொடுத்த இயக்குனர்.. வைரலாகும் புகைப்படம்
கீர்த்தி சனோன்
ராமாயண கதையை மையமாக வைத்து உருவான படம் "ஆதிபுருஷ்". இப்படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார்.
இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளிலும் வருகிற 16ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளிவர உள்ளது.
இதற்காக திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு இருக்கை காலியாக விடப்படும் என அறிவித்திருந்தார். "ஆதிபுருஷ்" படத்தின் கடைசி டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
முத்தம் கொடுத்த இயக்குனர்
இந்நிலையில் நடிகை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் பட குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.
அங்கு அவர்கள் திரைப்படத்தின் வெற்றிக்காக சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த அவர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பிறகு அங்கிருந்து கிளம்பிய கீர்த்தி சனோனை இயக்குனர் ஓம் ராவத் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தன்னுடைய அன்பை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அஜித், விஜய் படங்களில் நடித்த நடிகை சுவாதியா இது?- திருமணம், குழந்தை என எப்படி உள்ளார் பாருங்க

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
