எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் விவரம்.. இதோ
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். டாப் 5 டி.ஆர்.பி ரேட்டிங்கில் இந்த சீரியலும் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. திருச்செல்லாம் இயக்கி வரும் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் குறித்து முழு விவரத்தை இங்கு பார்க்கலாம் வாங்க.
கதாநாயகி ஜனனி { மதுமிதா }
ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகை மதுமிதா. இது இவருக்கு முதல் தமிழ் சீரியல் ஆகும். இதற்கு முன் கன்னடத்தில் இவர் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய கதாபாத்திரம் பல பெண்களை பிரதிபலிப்பாக இருக்கிறது என சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
கதாநாயகன் சக்தி { பிரஷாந்த் சபரி }
எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான அடையாளத்தை பெற்றுக்கொண்டவர் நடிகர் பிரஷாந்த் சபரி. இது தான் இவருக்கு அறிமுக சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்வரி குணசேகரன் { நடிகை கனிகா }
வெள்ளித்திரையில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் நடிகை கனிகா. இவர் அஜித்துடன் இணைந்து வரலாறு, மாதவனுடன் எதிரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து குடும்ப ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
ரேணுகா { பிரியதர்ஷினி }
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளினியும் நடிகையுமானவர் பிரியதர்ஷினி. இவர் சிறு வயதில் இருந்தே நடிக்க துவங்கிவிட்டார். பிரபல தொகுப்பாளினி டிடியின் அக்கா என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆதிமுத்து குணசேகரன் { நடிகர் மாரிமுத்து }
வெள்ளித்திரையில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் மாரிமுத்து. மேலும் கண்ணும் கண்ணும், புலிவால் என இரு திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார். சமீபத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கியவர் நடிகர் மாரிமுத்து. அதை தெரிந்து தான் செய்தேன் என்றும் அவரே ஒப்புக்கொண்டார். வெள்ளித்திரையில் மூத்த பிரபலமான இவருக்கு எதிர்நீச்சல் சீரியல் தான் சின்னத்திரையில் அறிமுகமாக அமைந்துள்ளது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
