"காதல் மன்னன்" ஜெமினி கணேசன் பற்றி பலரும் அறிந்திடாத விஷயங்கள்!! - இதோ
ஜெமினி கணேசன்
தமிழ் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற நடிகர் தான் ஜெமினி கணேசன். "காதல் மன்னன்" என்ற பெயருக்கு சொந்தக்காரர். இவர் எம்.ஜீ.ஆர், சிவாஜி திரைத்துறையை ஆட்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் அழகாலும், எதார்த்தமான நடிப்பாலும் தனக்கென தனி ஸ்டைல் அமைத்துக்கொண்டு தமிழ் திரையுலகை ஆட்சி செய்தவர்.
இவரின் நடிப்பில் வெளிவந்த ‘மனம்போல மாங்கல்யம்’, ‘கல்யாணப்பரிசு’, ‘பூவா தலையா’, ‘இரு கோடுகள்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘பார்திபன் கனவு’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கற்பகம்’, ‘புன்னகை’ போன்ற திரைப்படங்கள் சிறந்த படைப்புகள் போற்றப்படுகிறது.
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1940ம் ஆண்டு அலமேலு என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். பின் இந்தி நடிகையான புஷ்பவல்லியை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள் பிறந்தனர்.
அதன் பிறகு, 1953ல் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜயசாமூண்டிசுவரி மற்றும் சதீஷ் என இரு குழந்தைகள் பிறந்தனர். ‘கலைமாமணி விருது’ பெற்ற ஜெமினி தன்னுடைய 84 வயதில் காலமானார்.
அறிந்திடாத விஷயங்கள்
டாக்டர் பட்டம் கனவு :
ஜெமினி கணேசன் டாக்டர் ஆக வேண்டும் என லட்சியத்துடன் இருந்தார். அப்போது அதை அறிந்த அலமேலுவின் தந்தை ஜெமினி கணேசனுக்கு டாக்டர் சீட்டு வாங்கி தருவதாக கூறி அதற்கு பதிலாக தன்னுடைய மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.
இதற்கு சம்மதம் தெரிவித்து அலமேலுவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் முடிந்த ஒரு மாதத்திற்குள் ஜெமினி கணேசன் மாமனார் இறந்துவிட்டார். அவரின் டாக்டர் கனவு பறிபோனது. அதன்பின் தான் சினிமா துறையில் கால் தடம் பதித்தார்.
நடிகர் திலகத்துக்கு வாய்ப்பு கொடுத்த ஜெமினி :
ஜெமினி கணேசன் புது முகங்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்து ஜெமினி ஸ்டுடியோவிற்கு அனுப்புவது தான் அவருடைய வேலை. அவரிடம் வாய்ப்பு கேட்டு வந்தவர்களில் ஒருவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர் என்பது ஆச்சரியப்பட வேண்டிய உண்மை.
79 வயதில் திருமணம் :
காதல் மன்னனாக திகழ்ந்த ஜெமினி கணேசன் தனது 79 வயதில் தனக்கு செக்ரட்டரியாக வேலை பார்த்த ஜூலியானா என்ற பெண்ணை நான்காம் திருமணம் செய்து கொண்டார்.
இதை பற்றி பலர் விளக்கம் கேட்டபோது அவர், 82 வயதில் நெல்சன் மண்டேலா திருமணம் செய்துகொள்ளும் போது நான் செய்து கொள்ளகூடாத என்று பதில் கூறினார். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது
ரகசிய திருமணம் :
மிஸ்ஸியம்மா திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி இணைந்து நடிக்கும் போது இவர்களுக்கிடையில் காதல் மலர்ந்தது. அதன்பின் இருவரும் மோதிரம் மாற்றி ரகசிய திருமணம் செய்து நீண்ட காலம் மறைத்து வைத்துள்ளார்.
லக்ஸ் சோப் விளம்பரத்தில் நடிக்க சாவித்திரி கையெழுத்து போடும்போது சாவித்திரி கணேசன் என போட்டுள்ளார். இதனை பார்த்த பிறகுதான் அவர்களுக்கு ரகசிய திருமணம் நடந்ததை பற்றி அனைவருக்கும் தெரிந்தது.
வேலை வாய்ப்பு கேட்டு பாலச்சந்தர் :
தமிழ் சினிமாவில் புரட்சிகரமான கதை எழுதி இயக்கியவர் பாலச்சந்தர். இவர் படங்களில் துணிச்சலான பெண் கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு காட்டியவர். ரஜினி, கமல், விவேக் என பல ஜாம்பவான்களை உருவாக்கியவர்.
அப்படிப்பட்ட இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி ஜெமினி ஸ்டுடியோவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். ஒரு வாரத்திற்கு பிறகு பதில் கடிதம் வந்தது. அதில் உங்களுக்கு ஏற்றார் போல் எந்த வேலையும் இல்லை என்று குறி இப்படிக்கு ஆர். கணேசன் என கையெழுத்திடப்பட்டு இருந்தது.
பின் நாளில் ஆர்.கணேஷ் என்பவர் பல படங்களை நடித்த ஜெமினி கணேசன் ஆவார். மேலும் யாருக்கு வேலை இல்லை என்று சொன்னாரோ, அவருடைய இயக்கத்திலேயே பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெமினி கணேசன் மகளுக்கு சொல்லாமல் உதட்டில் முத்தம் கொடுத்த நடிகர்.. கதறி அழுத நடிகை